#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து சிவகாசிக்கு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. இந்த பேருந்தை பண்டிதன்பட்டியை சேர்ந்த தங்கமணி என்ற டிரைவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் இந்த பேருந்தானது செவல்பட்டி அலமேலு மங்கைபுரம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தானது சாலையை விட்டு கீழே இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செவல்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கல்லூரி மாணவிகளான ஸ்வர்ணமால்யா, ஸ்ரீநிதி, சுமதி, மகாலட்சுமி மற்றும் வெம்பக்கோட்டை முத்துலட்சுமி, ராமலட்சுமி, கமலா, ஸ்டெல்லா, முத்துமாரி, நாச்சியார், முத்துலட்சுமி ஆகிய பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பலியான முத்துமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.