#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே... ஆண் குழந்தை பலியான சோகத்தில்... ப்ளக் போர்டில் கைவைத்த தந்தை... அதிர்ச்சி முடிவு.!
அரியலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை அடுத்த ஏலாக்குறிச்சியைச் சேர்ந்தவர் தினேஷ் வயது 26 இவர் அரியலூரில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஆண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வழக்கம் போல் வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்திருக்கிறார் திவ்யா. அப்போது கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கீழே விழுந்து இருக்கிறது. உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்திருக்கிறார் தினேஷ். மேலும் தன்னுடைய வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை உறவினர்கள் காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து அவரை தாய் மாமா தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சென்றும் குழந்தையின் ஞாபகத்தில் இருந்த தினேஷ் உடலில் தாமிர கம்பிகளை சுற்றி பிளக் போர்டில் கை வைத்து மின்சாரம் பாய்ச்சி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.