#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் கோபம்: போலீசில் புகார் அளித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...!
சென்னை வேளச்சேரியில் உள்ள TNHB காலனியில் வசித்து வருபவர் தனசெல்வி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் வள்ளி என்பவர், சாலையை ஆக்கிரமித்து அவரின் வீட்டை விரிவுபடுத்துவதல், தனக்கு இடையூறு ஏற்படுவதாக, தனசெல்வி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர், வள்ளியின் வீட்டிற்கு வந்து விசாரித்து விட்டு சென்றனர்.அதன் பிறகு,வள்ளியின் மகனான விஜய் தனசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆத்திரத்தில், தனசெல்வியையும் அவரது கணவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
சாலையை ஆக்கிரமித்து பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் அவர்களது வீட்டை விரிவுபடுத்தியதால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டது என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தால், ஆத்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களால், பயங்கரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.