#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரை பயமுறுத்த மனைவி விளையாட்டாக செய்த காரியம் வினையாகிய சோகம் - அதிர்ச்சி தகவல்!
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் மதுரவாயலை சேர்ந்த வினோத்குமார் என்பவரைக் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
திடீரென ஒரு நாள் அனிதாவின் தந்தை இறந்து விடுகிறார். இதனால் அனிதா தன் கணவருடன் தாய் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது வினோத்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். எனவே அதற்கு முடிவு காண வேண்டும் என்று எண்ணியுள்ளார் அனிதா.
இந்நிலையில், வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த கணவரை பயமுறுத்த அனிதா உடலில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல் நடித்துள்ளார்.ஆனால் எதிர்பாராதவிதமாக அனிதாவின் உடலில் தீப்பற்றிக் கொண்டது.
உடனே அனிதாவின் குடும்பத்தினர் அனிதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.ஆனால் அங்கு சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.