Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
கோவில் நிலத்தில் வீடு கட்டிய ஞானசேகரன்; வருவாய்த்துறை ஆய்வில் அம்பலம்.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் பயின்று வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்றமும் வழக்கு விசாரணையை கண்காணிக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு அதிமுக, பாஜக, நாதக, பாமக ஆகிய கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள. ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் போனில் பேசிய சார் யார்? என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே பரபரப்பு... 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது..!
கோவில் நிலத்தில் வீடு
இந்நிலையில், ஞானசேகரனின் வீடு வெங்கடேசப்பெருமாள் கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாங்க - விற்க தடை செய்யப்பட்டுள்ள நிலத்தில் ஞானசேகரன் வீடு கட்டி இருக்கிறார். வருவாய்த்துறையினர் ஆய்வில் இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. கோவில் நிலத்தில் 3 மாடி வீடு கட்டப்பட்டுள்ளது.
அதேபோல, கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியில் 2 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமான நிலையில், அதில் வீடு காட்டியது தெரியவந்தது. நேற்று முன்தினம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: "சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது, முதல்வர் உறங்குகிறார்" - கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் பாஜக அண்ணாமலை காட்டம்.!