பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
''காமராசரை போல் முதலமைச்சர் இந்தியாவில் இல்லை, தமிழகத்தில் நிச்சயமாக இல்லை'' - அண்ணாமலை
இன்று கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்தநாள். இவரது பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி என்று மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல போட்டிகள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை தமிழகத்தில் நிச்சயமாக இல்லை என்று சொல்லும் அளவிற்கு காமராஜர் ஐயாவின் ஆட்சி அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
#NewsUpdate | இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை அண்ணாமலை உறுதி
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) July 15, 2023
| Annamalai #Annamalai #annamalaibjp #Kamarajar #KamarajarBirthday #newstamil24x7 pic.twitter.com/Pmz2HQ8UjE