"மனிதம் தழைத்தோங்கும் நாள் தூரத்தில் இல்லை" : இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் குறித்து அன்னபூரணி அம்மாள் கருத்து.!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை இயற்கையின் அவதாரமாக அறிவித்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் கோவில் கட்டி மக்களை வழிபாட்டுக்கு அனுமதித்து வரும் பெண்மணி அன்னபூரணி அரசு அம்மாள்.
இவருக்கு எதிராக தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டதாக கூறி, தனக்குத்தானே செய்தியை வெளியிட்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் வகையில் முகநூல் போன்ற சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவு செய்வது இயல்பு.
இந்நிலையில், தற்போது அவரின் முகநூல் பக்கத்தில், "இங்கு நிலவும் தீவிரவாதமோ, யுத்தங்களோ யார் வலியவர் என்ற ஆணவத்தின் கோர முகங்களே... இதற்கு மதம், சாதி, இனம், மொழிகளை பகடைகளாகப் பயன்படுத்துகின்றனர்... ஒரு தனிமனிதன் தன்னை உணரும்போது தன் ஆணவம் இழக்கத் தயாராகிறான்...
ஒவ்வொரு தனிமனிதனும் சத்தியம் உணரும்போது இந்த சமூகமே ஆணவம் இழக்கத் தயாராகும்... அப்போது இப்புவியெங்கும் மனிதம் தழைத்தோங்கும்... அருள்மிகு அன்னையின் சத்திய அவதாரத்தில் மனிதம் தழைத்தோங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை..." என பதிவிடப்பட்டுள்ளது.
இப்பதிவில் தீவிரவாதம், யுத்தம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள், தற்போதைய இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் குறித்து இருக்கலாம் என தெரியவருகிறது.