என்ன பிச்சை எடுக்குறீங்களா? எகதாளமான கேள்விக்கு நறுக்குனு பதிலடி கொடுத்த அறந்தாங்கி நிஷா..இனி ஏதாவது கேட்பீங்க..
வங்க கடலில் உருவான காற்றழத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நகர்ந்து வந்த நிலையில் கடந்த 15-ம் தேதி அதிவேக காற்று மற்றும் மழையுடன் கரையை கடந்தது.
இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளது. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.ஓடு மற்றும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இன்றுவரை பல ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளது.
இவ்வாறு கஜா புயலால் பாதிக்கப்பட்டு உணவு,வீடு இன்றி தவித்து வரும் மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில் அறந்தாங்கி நிஷா தன்னால் முடிந்த உதவியினை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊராக சென்று செய்து வருகிறார்.மேலும் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தது வருகிறார்.
இந்நிலையில் அவர் இவ்வாறு மற்றவர்களிடம் உதவி கேட்பதை கிண்டல் செய்த நபர் ஒருவர் பிச்சை எடுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு நிஷா தனது முகநூல் பக்கத்தில் தக்க பதிலடியினை தெரிவித்துள்ளார்.