#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தை இல்லை. கணவனின் நண்பனோடு தகாத உறவு! இறுதியில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை!
கள்ளக்காதல் அதன்மூலம் ஏற்படும் கொலைகள், தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் வேளையில் கணவனின் நண்பருடன் தகாத உறவில் ஈடுபட்டு அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் நம்மங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுடர்மணி. இவரது மனைவி பெயர் சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் சங்கீதாவின் கணவர் சுடர்மனியுடன் சரவணன் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். சரவணன் அடிக்கடி வீட்டுக்கு வரும்போது சங்கீதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுடர்மனிக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு சரவணனும், சங்கீதாவும் உல்லாசமான இருந்துள்ளனனர். மேலும், தனிமையில் இருந்ததை சரவணன் அவரது தொலைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது தொடர்பு சுடர்மனிக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடன் மீண்டும் வரவேண்டும் இல்லாவிட்டால் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என சரவணன் மிரட்டியுள்ளார். இதனால் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் சங்கீதா. இந்த சூழலில் சரவணன் ஒருசில புகைப்படங்களை சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.
அறிவழகன் இதுகுறித்து சங்கீதாவிடம் விசாரிக்க, சங்கீத எலிமருந்தை குடித்துவிட்டு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சரவணன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.