#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியின் பெயரில் உள்ள சொத்தில் கணவர் உரிமை கொண்டாட முடியுமா?..!
சொத்துக்கு வாரிசுதாரர்கள் எவ்வகையில் உரிமை கோரா இயலும் என்பது, அந்த சொத்து எப்படி வந்தது என்பதை பொறுத்து அமைகிறது. பூர்வீக சொத்துக்களாக இருக்கும் பட்சத்தில், அதில் உடமையாளராக இருக்கும் மகன், பேரன் ஆகியோருக்கு உரிமை உள்ளது.
தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்கு உரிமை சம்பாதித்தவருக்கு மட்டுமே இருக்கும். அந்த சொத்தில் எவரும் உரிமை கொண்டாட இயலாது. அவரின் காலத்திற்கு பின்னர், யாருக்கு வேண்டும் என்றாலும் அந்த சொத்தினை விருப்பப்படி எழுதி வைக்கலாம்.
அவரின் வாரிசு மற்றும் உறவினர் போன்றோர் சுய சம்பாத்திய சொத்தின் மீது உரிமை கோர இயலாது. மற்றொரு முறையில், மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? என்ற கேள்வியும் எழுந்துகொள்கிறது.
பெண்ணொருவருக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது பெண்ணுக்கு மட்டும் உரிமை உடையது ஆகும். பெண்ணின் பெற்றோர்கள் தனது பெண்ணின் நலனுக்கு சொத்தை எழுதி வைத்தால், அந்த சொத்து அவருக்கு மட்டும் தான்.
தனது கணவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கி மனைவியின் பெயருக்கு சொத்தை கொடுத்தால், அந்த சொத்தில் கணவரே உரிமை கொண்டாட இயலாது. பெண்ணின் பெயரில் எவ்வகையில் உள்ள சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அதற்கு முழு உரிமை பெண்ணுக்கு மட்டுமே உண்டு.
இந்து வாரிசுரிமை சட்டத்தின் படி, பெண்ணுக்கு எவ்வகையில் சொத்துக்கள் கிடைக்கப்பெற்றாலும், அது அவருக்கு மட்டுமே தனிபட்ட சொத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை கணவர் சொந்தம் கொண்டாட இயலாது. பெண் தனது சொத்துக்களை யாருக்கு வேண்டும் என்றாலும் எழுதி வைக்கலாம்.
கணவர் தனது வருமானத்தில் வாங்கிய சொத்தை, மனைவியின் பெயரில் பதிவு செய்தாலும் கணவருக்கு உரிமை கிடையாது. அந்த சொத்தை பெற வேண்டும் என்றால், சொத்து வாங்கியதற்கு செலுத்தப்பட்ட பணம் தன்னால் அளிக்கப்பட்டது என்ற ஆவணம் சமர்ப்பிக்கும் பட்சத்தில், கணவர் மனைவியின் சொத்தில் உரிமை கோரலாம்.