கிணற்றில் துணிதுவைத்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்



baby-dead-falling-into-wall

சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி லாவண்யா. யுவராஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அக்காவிற்கு உதவியாக திருத்தணியில் வசித்துவந்த லாவண்யாவின் தங்கை அவரது வீட்டிற்கு வந்தார். இவருக்கு மூன்று வயதில் மித்ரா என்ற குழந்தையும் திஷா என்ற 6 மாத குழந்தையும் உள்ளது. 

லாவண்யா வீட்டில் உறைகிணறு ஒன்று உள்ளது. அதன் அருகே தனது இருகுழந்தைகளையும் விளையாட விட்டுவிட்டு சரண்யா துணி துவைத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது கிணற்றின் அருகே நடந்து சென்ற மூன்று வயது சிறுமி மித்ரா எதிர்பாராதவிதமாக கிணற்றின் உள்ளே விழுந்துள்ளார். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு சரண்யா கிணற்றின் உள்ளே எட்டிபார்த்துள்ளார். குழந்தை மித்ரா அப்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது.

wall

இதனைக்கண்ட சரண்யா அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றின் உள்ளே குதித்து குழந்தையை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றநிலையில் அதனைபரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.