பகீர்.. பிரிந்து சென்ற மனைவி வேறொரு ஆணுடன் டூவீலரில் பயணம்.. சினிமா பாணியில் காரை விட்டு மோதி கொலை செய்ய முயன்ற கணவர்..!



Bagheer.. The estranged wife was traveling with another man on a two-wheeler.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சாலைபுதூரில் வசித்து வருபவர்கள் பிரதீப் குமார் - நந்தினி தம்பதியினர். நந்தினி வேளாண் விரிவாக்க அலுவலக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் நீலகவுண்டன் பட்டியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் நந்தினி பங்கேற்றுள்ளார். பின்னர் சக ஊழியரான அசோக் குமார் என்பவருடன் டூவீலரில் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பிரதீப் குமார் தனது மனைவி வேறு ஒருவருடன் டூவீலரில் சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Husband

இதனையடுத்து ஆத்திரம் தாங்காமல் பிரதீப் குமார் தனது காரை வேகமாக ஓட்டிச் சென்று நந்தினி சென்ற டூவீலர் மீது மோதியுள்ளார். இதில் கீழே விழுந்து காயமடைந்த நந்தினியை மட்டும் தூக்கி காரில் போட்டுக்கொண்டு வேகமாக காரை இயக்கியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சிலர் காரை துரத்தி சென்றதால் நாயக்கனூரில் மனைவி நந்தினியை கீழே இறக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும் அவரை பின்தொடர்ந்த பொதுமக்கள் தும்பிச்சம்பட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.