#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென மாயமான கல்லூரி மாணவி... காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை.!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி மாயமான சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகள் சிவசக்தி.22 வயதான இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பல்கலைக்கழகத்திற்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை பல இடங்களிலும் தேடி இருக்கின்றனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால் இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் சாந்தி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி யாராலும் கடத்தப்பட்டாரா ? மாணவிக்கு எதுவும் அசம்பாவிதம் நடந்து விட்டதா? என பல கோணங்களில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.