காவலாளியை கொலை செய்து கொள்ளையடித்து தப்பிச்சென்ற பீகார் இளைஞர்... சேலம் ரயில் நிலையத்தில் கைது...!



Bihar youth who escaped after killing and robbing a watchman... Arrested at Salem railway station...

சேலம் அமானி கொண்டலாம்பட்டி சேர்ந்தவர் தங்கையன் (58). இவர் சேலம் 3 ரோடு அருகே மணிபுரத்தில் உள்ள பருப்பு மில்லில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலையில் தங்கையன் பருப்பு மில்லில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவலாளி தங்கையனை கொன்றுவிட்டு பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அங்கு இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்யர்தனர். அதில் நள்ளிரவு இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்து செல்லும் காட்சி இருந்தது. அந்த இளைஞர் யார் என்ன விசாரித்தனர். அப்போது கடந்த செவ்வாய் கிழமை, பருப்பு மில்லில் அந்த இளைஞர் வேலைக்கு சேர்ந்துள்ளார், என்பது தெரிய வந்தது. 

அவரது செல் போன் நம்பரை வாங்கிய காவல்துறையினர், விசாரணையில் ஈடுபட்டனர். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் குமார் என்ற சோனு குமார் (19) என்பவர் என்று தெரிய வந்தது.

இதை தொடர்ந்து சோனகுமார் பீகாரருக்கு தப்பிச் செல்ல சேலம் ரயில் நிலையம் வந்துள்ளார். அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். சோனுகுமாரிடமிருந்து ரூ.1.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கொலை நடந்த பருப்பு மில்லில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள பணத்தை எங்கு கொள்ளையடித்தார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சோனு குமார் குடும்பத்துடன் சேலம் வந்துள்ளார். சேலத்தில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்றுள்ளனர். பைப் கம்பெனி, கருப்பு மில் போன்றவற்றில் வேலை செய்து வந்துள்ளார்.

பருப்பு மில்லில் ஒரு நாள் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு 600 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால், பணத்தை கொள்ளை அடிக்க சைக்கிளில் வந்துள்ளார். ஆனால் காவலாளி தங்கையன் இருந்ததை கவனிக்கவில்லை.

சோனகுமாரை பார்த்த தங்கையன் உள்ளே வந்த சோனு குமாரை ஏன் உள்ளே வந்தாய் என்று கேட்டதுடன், ஓனருக்கு தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சோனு குமார் அங்கு இருந்த சாக்கு பையை தங்கையன் முகத்தில் போட்டு சராசரியாக  கட்டையால் அடித்துள்ளார். 

தங்கையின் உயிரிழந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட சோனுகுமார் உள்ளே சென்று பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் சோனகுமாரிடமிருந்து அதிக அளவு பணம் மீட்கப்பட்டுள்ளதால், வேறு எங்கேயாவது திருட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.