#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்டைலாக முடிவெட்டி கொண்ட இளைஞன்! கண்டித்து தாய் செய்த காரியத்தால் நேர்ந்த விபரீதம்!
சென்னை வளசரவாக்கம் அருகே கைக்கான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. அவர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன். 17 வயது நிறைந்த அவர் குன்றத்தூர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
விடுதியில் தங்கி படித்து வந்த சீனிவாசன் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். அப்பொழுது சலூன் கடைக்கு முடி வெட்ட சென்ற அவர் ஸ்டைலாக முடிவெட்டி வந்துள்ளார். இதனை கண்ட அவரது தாய் மோகனா படிக்கும் வயதில் இப்படியா முடிவெட்டுவது என மகனை கண்டித்து ஒழுங்காக வெட்டுமாறு கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சீனிவாசன் மோகனா வேலைக்கு சென்றிருந்த வேளையில், அவரது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மோகனா மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தார்.
மேலும் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அவரது தாய் அலறி துடித்துள்ளார்.