#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விபத்தில் பலியான திருடன்.. குமரியில் சம்பவம்.!
10 சவரன் தங்க செயினை பறித்து சென்ற திருடர்களில் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை பகுதியில் வசித்து வருபவர் பிரேமிகா. இவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல தனது பணியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 மர்ம நபர்கள் அவரது 10 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
இதனால் சற்றும் தாமதிக்காமல் பிரேமிகா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், மருமாமூடு பகுதியில் விபத்தில் சிக்கி ஒருவர் இறந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்க்கையில், இருசக்கர வாகனத்தில் இருவர் வேகமாக வந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உயிரிழந்த சஜாதுஹான் என்பவரை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் படுகாயமடைந்த அமலை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரிடம் பத்து சவரன் தங்க செயின் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்பின் இந்த 10 சவரன் தங்கச் செயின் பிரமிகாவுடையது என்று உறுதி செய்தபின் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.