மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாதி எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் சேர்ந்தவர் வல்லரசு. இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையாள பட்டி பகுதியில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அங்கு வசித்து வந்துள்ளார். மேலும் அவருடன் திருமணமான ஒரு இளம் பெண்ணும் தங்கியுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் இருவரும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளனர்.
இதனையடுத்து பக்கத்து வீட்டு தோட்டத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தோட்டத்தில் ஒரு மூலையில் விறகு கட்டைகளை அடுக்கி வைத்து அதில் இளம் பெண்ணின் உடல் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சுகுணா என்பது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சுகுணாவிற்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வல்லரசுவுடன் தகாத உறவு ஏற்பட்டதால் கணவனை விட்டு பிரிந்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வல்லரசு சுகுணாவை கொலை செய்துள்ளார்.
மேலும் தடயத்தை மறைப்பதற்காக சடலத்தை எரித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள வல்லரசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.