#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துணிகர செயல்..! மகனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து பாட்டிலில் அடைத்த தாய்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி ..!
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரவி- கோமதி தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் பூவரசன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் நேற்று தங்களது மாட்டு தொழுவத்தில் உள்ள சாணம் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த பாம்பு ஒன்று பூவரசனை கடித்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூவரசன் பாம்பு கடித்து விட்டது என்று அலறி சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து இவரது அலாரம் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த தாய் கோமதி மற்றும் அக்கம் பக்கத்தினர் பூவரசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் பூவரசனை கடித்த பாம்பை அங்கிருந்தவர்கள் லாவகரமாக பிடித்து ஒரு தண்ணீர் கொண்டு செல்லும் பாட்டிலில் அடைத்து பூவரசனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பூவரசனின் தாய் தனது மகனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் இதுதான் என் மகனை கடித்த பாம்பு என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த பாம்பை கண்ட மருத்துவர்கள் இந்த பாம்பானது பெரிய அளவில் விஷத்தன்மை அற்றது என தெரிவித்ததை அடுத்து சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாட்டில் அடைக்கப்பட்ட பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.