பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#BREAKING பேருந்து மற்றும் ரயில் சேவை தொடக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா? தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி கோரதாண்டவம் ஆடிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஊரடங்கால் ஏராளமான தொழிலாளர்கள் வருமானம் இழந்து பொருளாதார பிரச்சினைகளால் தவித்த நிலையில், ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொதுப் பேருந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு பேருந்துகள் இயக்கபட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்கிளுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி அளிப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.