தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இவற்றை மட்டும் பின்பற்றினால் போதும்; இனி 24 மணி நேரமும் செயல்படலாம்: தமிழக அரசு அனுமதி..!
10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பணியாளரின் விவரங்களும் நிறுவன உரிமையாளரால் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
ஊழியர்களின் ஊதியம், கூடுதல் நேர ஊதியம் சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். எந்த ஒரு ஊழியரும் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது. பணியாளர்கள் விடுமுறையிலோ அல்லது பணி நேரத்திற்குப் பிறகோ பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் ஊழியர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை. பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, அவர்களின் பாதுகாப்பிற்கு போதுமான சூழ்நிலையை வழங்கி இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
ஷிப்டுகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் முக்கிய நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டும்.
பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க, புகார் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.