கதிகலங்கும் மக்கள்... 400 கிலோ ரசாயனம் கலந்த உணவுப்பொருட்கள் பறிமுதல்.!
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று இயற்கை விவசாயத்தில் இருந்துவரும் உணவுப்பொருட்கள். மற்றொன்று பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து பயிர் வேகமாக வளர்வதற்கும், அதிக விளைச்சல்தருவதற்கும் கெமிக்கல் கலந்த பயிர்களால் செய்யப்படும் உணவு பொருட்கள்.
ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் உணவு பொருட்கள் ரசாயனங்கள் இன்றி முழுவதும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை. ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் உணவு பொருட்கள் தான் உடலுக்கு எந்த கேடும் விளைவிக்காது. தற்போது சில இடங்களில் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் கூட கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயன சாயம் கலந்து விற்பனை செய்கின்றனர்.
இந்தநிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் முறைகேடாக ரசாயன சாயம் கலந்து காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 50 கடைகளில் பச்சை நிற ரசாயன சாயம் கலந்த பச்சை பட்டாணி மற்றும் ரோஸ் நிற சாயம் கலந்த டபுள் பீன்ஸ் என சுமார் 400 கிலோ பச்சை பட்டாணி மற்றும் டபுள் பீன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரசாயனம் கலந்து விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.