#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#JustIN: எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு: திருப்போரூருரில் மர்ம நபர்கள் பகீர் செயல்.. அதிமுகவினர் போராட்டம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை இருக்கிறது. இந்நிலையில், இன்று எம்.ஜி.ஆர் சிலையின் மீது மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து சென்றனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், மர்ம நபர்களை கைது செய்யக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், காவலர்கள் காவி துண்டை எடுக்க முயற்சித்தபோது, மர்ம நபர்களைக்கைது செய்தபின்னரே காவி துண்டு எடுக்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.