பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பள்ளி வகுப்பறையில் இரத்த வெள்ளத்தில் பெண்ணின் சடலம்.. கள்ளக்காதலன் பகீர் செயல்.. செங்கல்பட்டில் பயங்கரம்.!
தனியார் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெண் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டிட மேஸ்திரியான கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, தனியார் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளில் பெண் தொழிலாளியான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரனையை சேர்ந்த மலர் (வயது 40) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினத்தில் பள்ளி வகுப்பறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக செங்கல்பட்டு நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்த கரிகாலன் (வயது 45) என்பரை விழுப்புரம் மாம்பழப்பட்டை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவரிடம் நடந்த விசாரணையில், காரனை கிராமத்தை சேர்ந்த மலர், 7 ஆவது வார்டு உறுப்பினர் ஆவார். இவரின் கணவர் பஞ்சம். இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மலரும், கரிகாலனும் அருகருகே உள்ள ஊரை சேர்ந்தவர்கள். மேஸ்திரியாக இருந்த கரிகாலனிடம், மலரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனால் மலரை கரிகாலன் வேலைக்கு உள்ள இடங்களுக்கு அழைத்துச்சென்று வந்த நிலையில், இருவருக்குள்ளும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவில் மலர் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். மேலும், ஊருக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.
கரிகாலனோ அடிக்கடி பணம் கேட்டால் எப்படி? நான் என்ன நோட்டா அச்சடிக்கிறேன் என்று கூற, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கரிகாலன், கத்தியை எடுத்து வந்து மலரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்து தப்பி சென்றுள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, கரிகாலனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.