என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... ஓடும் பேருந்தில் பியர் குடிக்கும் புள்ளிங்கோ மாணவிகள்.. ஆட்டம், பாட்டம் அலப்பறை.. பகீர் வீடியோ.!



Chengalpattu School Girls Drinking Liquor Beer During Travel Bus With School Uniform

சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மதுபானம் அருந்துவது இன்று சர்வ சாதாரணமாகியுள்ள நிலையில், பல கேடுகெட்ட குடிகாரன்கள் வாயில்லா ஜீவன்களுக்கும் சரக்கை ஊற்றிவிட்டு போதையில் தள்ளாட வைக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால தூண்களாக இருக்கும் இளைஞர்கள், மதுபோதையில் செய்யும் அட்டகாசங்கள் மற்றும் கொலைகள் அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது. 

மதுவால் ஏற்படும் தீமைகள், அதனால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் அவை பயனின்றி போவதை உறுதி செய்யும் வகையில் சில வீடியோக்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருக்கிறது. அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பல கோரிக்கை இருந்தாலும், இன்று வரை அவை கானல் நீராகவே இருக்கின்றன. 

Chengalpattu

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் மாணவிகள் பியர் குடித்துவிட்டு அலப்பறை செய்து பயணம் செய்யும் பேரதிர்ச்சி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கையில், குறிப்பட்ட பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகள் இதனை வாடிக்கையாக செய்து வருவதாகவும் பகீர் தகவல் கிடைத்துள்ளன. 

பீர் குடிப்பதை உடன் வந்த மாணவிகளும் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்யும் நிலையில், இவர்களுடன் பயணிக்கும் ஆண் மாணவரும் மாணவிகளை உற்சாகப்படுத்துகிறார். இவ்வாறு உடலை திடகாத்திரத்தடத்துடன் வைத்திருக்க வேண்டிய வயதில் கண்டதையும் குடித்துவிட்டு உடல்நலத்தை சீரழித்து, வாழ வேண்டிய வயதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்க்கையை இழந்து தெருவில் நின்று புலம்பினால் செய்த தவறுகள் சரியாகிவிடுமா? என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.

"மது உடல் நலத்தை கெடுக்கும், உயிரை குடிக்கும், எதிர்காலத்தை சீரழிக்கும்"