மழை பெய்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டதா! சபிக்கப்பட்டதா சென்னை; தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள 20 ஆண்டு வரலாறு.!



chennai - rain - 20years before - tamilnadu weathermen

தமிழகத்தில் கடந்த சில மாதமாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. 

பானி புயலால் தமிழகம் மழை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் திசை திரும்பி ஒடிசாவை சூறையாடி அம்மாநிலத்தை தண்ணீரில் மிதக்க வைத்தது. தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை முகம் காட்டி மக்களை மகிழ்ச்சி படுத்துகிறது. ஆனால் சென்னையின் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது.



 

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தான் தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அதுவும் கேரளாவில் தான் அதிக மழை பொலிவை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனியாா் வானிலை ஆய்வு மைய அதிகாாி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், சென்னையில் கடந்த 180 நாட்களில் ஒருமுறை கூட 12 மி.மீ. அளவில் கூட மழை பெய்யவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சென்னை சபிக்கப்பட்டதா, மழை வராததற்கு மரம் காரணமா அல்லது மக்கள் காரணமா? என வினவியுள்ளாா். மேலும்,  சென்னை இதுபோன்று மழையின்றி தவித்த 20 ஆண்டுகால வரலாற்றையும்  குறிப்பிட்டுள்ளாா்.