#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கார் ஓட்டும் பயிற்சியில் விபரீதம்.. சுற்றுசுவரில் மோதி பயங்கர விபத்து..!
மைதானத்தில் கார் ஓட்ட பயிற்சி அளித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னையில் உள்ள கிண்டி மடுவின்கரை மசூதி காலனியில் வசித்து வருபவர் செய்யது (வயது 26). இவர் ஆதம்பாக்கம் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் தனது மனைவிக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்த நிலையில், அவர் காரின் வேகத்தை குறைக்காமல் திருப்பத்தில் காரை வேகமாக திருப்பி இருக்கிறார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், காரில் உள்ள உயிர் காக்கும் பலூன் உடனடியாக வெளியே வந்ததால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பின் இது குறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அங்கு வந்த அம்பேத்கர் சிலை பராமரிப்பு குழுவினரிடம், தம்பதிகள் "கார் மோதி உடைந்த சுவரினை நாங்கள் கட்டித் தருகிறோம்.
எங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.