#Breaking: சென்னை வங்கிக்கொள்ளையில் முக்கிய திருப்பம் - ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வங்கி ஊழியர்..! அதிகாரிகள் வலைவீச்சு.!



Chennai Arumbakkam Pedral Bank Gold Loan Branch Robbery

அரும்பாக்கத்தில் நடைபெற்ற தங்க நகைக்கடன் நிறுவன கொள்ளையில் ஊழியர் ஸ்கெட் போட்டுக்கொடுத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அவர் உட்பட கொள்ளை கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

சென்னையில் உள்ள அரும்பாக்கம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியின் கிளை நிறுவனமான பெட் பேங்க் கோல்ட் லோன் நிறுவனத்தில் இன்று கொள்ளை நடைபெற்றுள்ளது. இன்று பிற்பகலில் 3 ஊழியர்கள் பணியில் இருக்கும் போது வந்த 3 பேர் கும்பல், வங்கி ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளது. 

மேலும், வங்கியின் ஊழியர்களை கட்டிப்போட்டு, முகத்தில் மயக்க மருந்து தெளித்து கொள்ளை நடந்துள்ளது. மயக்கத்தில் இருந்த ஊழியர்கள் எழுந்து அருகே இருந்தவர்களின் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

tamilnadu

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், வங்கி ஊழியர் முருகன் தனது கூட்டாளிகளான கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்து கொள்ளை நடந்துள்ளது. ரூ.20 கோடி மதிப்புடைய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமாகவே, கண்காணிப்பு கேமிரா காட்சிகளின் அடிப்படையில் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொள்ளைக்கும்பல் தப்பி சென்ற இருசக்கர வாகனம் குறித்த தகவல் காவல் துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் எவ்வழியாக தப்பி சென்று இருப்பார்கள் என்று சோதனை நடத்தி பிடிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கி ஊழியர் முருகனின் நண்பர்கள் யார்? அவர்கள் எங்கு தப்பி சென்று இருப்பார்கள்? என்ற விசாரணை நடந்து வருகிறது.