#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகன் - மருமகள் என்னை கவனிக்கலை.. கணவன் தற்கொலை செய்த நாளில் மூதாட்டியின் விபரீத முடிவு.! கடவுளாய் காக்கி தெய்வம்.!
சென்னையில் உள்ள பெசன்ட் நகர், கவர்னர் விருந்தினர் இல்லம் பின்புறமுள்ள கடலில், நேற்று மூதாட்டி ஒருவர் தனியாக வந்துள்ளார். மூதாட்டி வேடிக்கை பார்க்க வந்திருப்பார் என்று அவரை பலரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், மூதாட்டி திடீரென கடலில் இறங்கி தற்கொலை செய்ய முயற்சிப்பது போல, விரைந்து கடலுக்குள் சென்றுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரி ராஜா (வயது 47) மூதாட்டியை மீட்டுள்ளார்.
பின்னர், சாஸ்திரி நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், மூதாட்டி புரசைவாக்கம் பகுதியை சார்ந்த மகேஸ்வரி (வயது 59) என்பதும், தனது மகன் மற்றும் மருமகள் தன்னை சரியாக கவனிக்காத காரணத்தால் மன உளைச்சலடைந்து, கணவர் சந்திரன் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நாளில், தானும் தற்கொலை செய்ய வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மகேஸ்வரியின் மகனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, கண்டிப்புடன் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.