#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்ஸ்டாவில் தோழியுடன் ரீல்ஸ் செய்ய மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்.. 2கே கிட் அட்ராசிட்டி..!!
சென்னையில் உள்ள சூளைமேடு பெண்கள் விடுதியில் தங்கியிருந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி திடீரென மாயமானார்.
இதனால் விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் வீடியோ செய்து வருவது உறுதியாகவே, அவரின் இன்ஸ்டா கணக்கு கண்காணிக்கப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்தி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருந்த சிறுமியை காவல் துறையினர் மீட்டனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழியுடன் ரீலிஸ் செய்வதற்கு விடுதியில் இருந்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை மீட்ட அதிகாரிகள் அறிவுரை கூறி தந்தையிடம் ஒப்படைத்தனர்.