#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"உங்க சாதி வீட்டுல"., 26 வயது காதலியை கர்ப்பமாக்கி, அம்போவென தவிக்கவிட்ட இளம்பாடகர்.. நியாயம் கேட்டு பெண் குமுறல்.!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடகராக வலம்வந்தவரின் மீது காதலித்து கருக்கலைப்பு செய்யவைத்து ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் குருகுகன் (வயது 26). இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை கச்சேரி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாக வலம்வருகிறார். சென்னையில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குகன், அவ்வப்போது அதில் பாடலையும் பாடி கவனம் பெற்று வந்துள்ளார். இதன் வாயிலாகவே அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: "தீபாவளிக்கு வீட்டுக்கு வாயா மஜாவா இருக்கலாம்.." ஓனருடன் கள்ளக்காதல்.!! கணவன் கொலை.!!
தனிமை சந்திப்பு கர்ப்பம்
குகன் பரங்கிமலை பகுதியில் வசித்து வரும் சாப்ட்வெர் என்ஜினியராக இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் சந்தித்து அவரை கர்ப்பமாக்கியும் இருக்கிறார். இதனால் பெண்மணி திருமணம் குறித்து பேசியபோது, கருவை கலைத்து வா திருமணம் செய்யலாம் என கூறியுள்ளார்.
நியாயம் கேட்க சென்ற நபர்கள்
கருவை கலைக்க மறுப்புத்தெரிவித்தபோது, பெண்ணை மனரீதியாக பாதிக்கும் வகையில் பேசிய கயவன், இறுதியில் அவரை அடித்து, துன்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். பின் திருமணம் குறித்து பேசியபோது, சாதியை காரணம் காண்பித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோருடன் குகனின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர்.
சாதி பேச்சு
அப்போது, அவர்களோ உங்களது சாதி ஆட்கள் வீட்டில் நாங்கள் தண்ணீர் கூட வாங்கி குடிக்கமாட்டோம், உங்களுக்கு எப்படி எனது மகனை மணம்முடித்து கொடுப்பது? என பேசி இருக்கின்றனர். அவர்களின் மகன் செய்த வேலையை சொல்லி கேட்டபோது, குகனின் பெற்றோர் உனக்கு திருமணத்தில் சம்மதமா? என கேட்டுள்ளனர். அவர் முதலில் சமாளிக்க சரி என கூறிவிட்டு, தற்போது தலைமறைவாகி இருக்கிறார்.
காவல் நிலையத்தில் புகார்
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி தன்னை ஏமாற்றிய குகனின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குகனை அவரின் பெற்றோர் மலேஷியா அழைத்துச்செல்ல முற்பட்டுள்ள காரணத்தால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
காதல், தனிமைக்கு தெரியாத சாதி திருமணத்தில் தெரிவது ஏன்?
காதலிக்கும்போதும், காதலின் தொடக்கத்திலேயே எனது சாதி இதுவே, உனது வீட்டில் ஒப்புக்கொள்வார்களா? என பெண் கேட்டும், திரைப்படத்தை போல பன்ச் டயலாக் அடித்த சதிகாரன், இறுதியில் இளம்பெண்ணை கைவிட்டு அவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறான். மனதை பறிகொடுத்த அந்த பெண்ணோ, திருமணம் கைகூடுமா? என்ன நடக்கும்? என்பது தெரியாமல் விழிபிதுங்கி புகார் அளித்து இருக்கிறார்.
பெற்றோரிடம் தனது காதலை புரியவைத்து பச்சைக்கொடி வாங்கத்தெரியாத நபர்களுக்கு காதலும், சமநீதி வசனமும் எதற்கு?
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் போதைப்பொருள் சாம்ராஜ்யம்.. ரியல் "கோலமாவு கோகிலா" கைது., திரைப்படத்தை மிஞ்சும் உண்மை உள்ளே.!