பெயரை மாற்றவே முடியாது! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி முடிவு! இதுதான் காரணமா?



chennai highcourt name cannot changed

தற்போதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மெட்ராஸ் நீதிமன்றம் என்ற பெயரிலேயே உள்ளது. மேலும் அலுவலக முத்திரைகள், ஆவணங்கள் என அனைத்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரிலேயே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம்  நடைபெற்றது.

அப்பொழுது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பிய பரிந்துரை கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது.

chennai highcourt

அப்பொழுது  நீதிபதிகள் மெட்ராஸ் நீதிமன்றம் என்ற பெயரை மாற்ற முடியாது. மேலும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்ற சார்ட்டர்டு நீதிமன்றங்களான பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் இதுவரை  மாற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்துடன் புதுச்சேரி நீதி வழங்கல் துறை உள்ளடக்கியுள்ளதால் அதனை தனியாக தமிழ்நாடு என்று  சொல்லிவிட முடியாது எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.