#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நண்பன் வீட்டில் கைவைத்து, சொந்தமாக சலூன் கடை திறந்த நட்பு.. சென்னையில் சம்பவம்.!
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி, வெங்கடாசலம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சாரதி (வயது 28). இவரின் வீட்டில் கடந்த சில மாதத்திற்கு முன்னதாக பீரோவில் இருந்த 21 சவரன் நகைகள், ரூ.2 இலட்சம் பணம் மாயமானது.
பீரோ உடைக்கப்படாமல் பணம் மற்றும் நகைகள் மாயமாகி இருந்த நிலையில், இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சாரதி புகார் அளித்து இருந்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் பகுதியை சேர்ந்த சுமன் என்ற நண்பர் சாரதியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்த நிலையில், அவர் சாரதியின் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து பணம் மற்றும் நகையை திருடி சென்றது அம்பலமானது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த சுமனை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த பணம் மற்றும் நகையை மீட்டுள்ளனர். சுமன் சொந்தமாக திருட்டு பணத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.