#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாயின் பிறந்தநாளில் சோகம்; இளம்பெண், தோழி நீரில் மூழ்கி பலி.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துயரம்.!
சென்னையில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் பிரேமா. இவரின் மகள் அனுசத்யா (வயது 31). இவரின் தோழி சைலஜா (வயது 29). நேற்று பிரேமாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் தாயின் பிறந்தநாள் சிறப்பிக்க அனுசத்யா எண்ணியுள்ளார்.
தங்களின் திட்டப்படி, இவர்கள் மூவரும் கானாத்தூர் பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளளது.
நீச்சல் குளத்தில் அனுசத்யா மற்றும் அவரின் தோழி சைலஜா குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம், இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இருக்கின்றனர்.
உதவிக்காக அபயக்குரல் எழுப்பி, உதவி கிடைப்பதற்குள் அனுசத்யா மற்றும் அவரின் தோழி சைலஜா பரிதாபமாக உயிரிழந்தனர். பின் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கானாத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.