#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigNews: ஸ்தம்பிக்கப்போகிறது சென்னை?.. தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம் தொடங்குகிறது?..! பரபரப்பு தகவல்..!!
Exculsive Reports...
சென்னையில் செயல்பட்டு வரும் பிரதான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் குறிப்பிட்ட தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்தினரால் சூறையாடப்பட்டு மோசடி செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து 3 வருடமாக குரல் கொடுத்ததும் பலனில்லை என்பதால் போராட்டத்தில் இறங்குவதே வழி என கூறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தயாராகியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் சிப்காட்டில், இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபடும் பெரு நிறுவனங்களின் உற்பத்தி தொழிற்சாலை வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 3 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்பது தொழிற்சங்க விதி ஆகும். ஆனால், ஏற்கனவே 2018 - 2022 ஆம் வருடத்தில் ஏற்படுத்தப்பட்ட ஊதிய ஒப்பந்தத்திலேயே பல்வேறு குளறுபடிகள் நிர்வாகத்தினரால் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், நடப்பு வருடமான 2022 - 2025 ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2018 - 2022 இடைப்பட்ட காலத்தில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், சி.ஐ.டி தொழிற்சங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டதாக சி.ஐ.டி சங்கத்தை கொண்டு வர முயன்ற 2 பணியாளர்களை நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பணியாளர்கள் 55 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில், 55 நாட்கள் கழித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. போராட்டம் நிறைவு பெற்றதும், நிர்வாகத்திடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, நீண்ட கால ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 2 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
நீண்ட கால மற்றும் 3 வருட ஊதிய ஒப்பந்தத்தில் குளறுபடிகள் நடந்த நிலையில், அது தொடர்பாக பணியாளர்கள் தொழிற்சங்கத்திடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்கப்படவில்லை. இதனால் குளறுபடிகள் உறுதியாகவே பணியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்துள்ளனர். இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேர், பணியிடங்களுக்கு வராமல் தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்பட்டு பணியாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மேலும், இந்த 8 நிர்வாகிகளுக்கு ஒரு வருடம் மட்டுமே பணிக்காலம் என்ற நிலையில், வருடம் முடிந்ததும் தேர்தல் வைக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 3 வருடமாக தொழிற்சங்க நிர்வாகிகளான 8 பேரும் தேர்தலை நடத்த மறுப்பு தெரிவித்து, தங்களின் பணியிடங்களுக்கு வராமல், பணியாட்கள் பிரச்சனைகளையும் கேட்காமல் நிர்வாகம் கொடுத்த அலுவலகத்தில் அமர்ந்து ஊதியம் பெற்று வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்தின் நிர்வாகம், தொழிற்சங்கத்தை சேர்ந்த 8 பேரும் சேர்ந்து தங்களுக்கு சாதகமான விஷயங்களை நிறைவேற்றிக்கொள்வதால், கடந்த 3 வருடமாக பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மேலும், பணியாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் செய்யாமல் தட்டிக்கழித்து இருக்கின்றனர். இதுபோக 3 வருடம் கழித்தும் தேர்தல் நடத்த மறுப்பு தெரிவித்து தொழிற்சங்கமும் - நிறுவனமும் பணியாளர்களை துன்புறுத்தி வந்த நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பும் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தி இருக்கின்றனர். தொழிற்சங்கத்தில் உள்ள 8 பேர் பணியாளர்களுக்கு துரோகம் இழைத்து, நிர்வாகம் வழங்கும் ஊதியத்தை மட்டும் பெறுவதை குறிக்கோளாக வைத்து இருந்து வந்துள்ளனர்.
தற்போது, பெரும்பான்மையான தொழிலாளர்கள் தேர்தலை நடத்துகையில், 8 நிர்வாகிகள் தேர்தலில் பங்கேற்காமல் தட்டிக்கழித்து இருக்கின்றனர். மேலும், யாரும் வாக்களிக்க செல்ல கூடாது எனவும் பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்கள். தொழிலாளர்களின் சுய முயற்சியில் நடந்த தேர்தலில் 8 பேர் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், பழைய தொழிற்சங்க நிர்வாகிகளும் தேர்தல் முடிந்ததை ஏற்றுக்கொண்டு வெளியேறாமல் அப்படியே இருக்கிறார்கள். இதனால் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டிய காலம் வந்துள்ள நிலையில், பழைய தொழிற்சங்க நிர்வாகிகள் நாங்கள் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அடம்பிடிப்பதால், இவர்கள் தொழிற்சங்க விதிகளுக்கு எதிராக செயல்படுவது அப்பட்டமாக உறுதியாகியுள்ளது. இந்த விதிமீறலுக்கு பகிரங்கமாக ஒத்துழைக்கும் நிறுவனத்தின் நிர்வாகமும், பழைய தொழிற்சங்க நிர்வாகிகளையே ஆதரித்து செயல்படுகிறது.
இந்த விஷயத்திற்கு எதிராக கேள்வி எழுப்பும் பணியாளர்களை நிர்வாகம் பழிவாங்கியும் வருகிறது. தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் நிர்வாகம் மற்றும் பழைய தொழிற்சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளின் காரணமாக பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மிகப்பெரிய அளவில் போரட்டம் வெடிக்கலாம் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு 6 மாதத்திற்கு முன்னதாகவே தெரியப்படுத்திய நிலையில், அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் சமரச அதிகாரியும் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதால் எந்த பலனும் இல்லை என்று பணியாளர்கள் குமுறுகின்றனர். கடந்த 3 வருடமாக தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகம் செய்த குளறுபடி, அவர்களின் ஒத்துழைப்பு காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அப்பட்டமாக சூறையாடியதும் உறுதியாகியுள்ளதால், தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளை பணத்தை சம்பாத்தியமும் செய்து இருக்கின்றனர்.
இதனைப்போல, தொழிற்சாலையின் நிர்வாகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தோர் அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப்படும் நிலையில், நிர்வாக பணிகளில் 10 பேரில் 2 பேர் மட்டும் தமிழர்கள் என்ற நிலையில் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஒருசில வருடங்களில் தமிழர்களின் வேலைவாய்ப்பு ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போதே, தமிழக தொழிலாளர்களை குறிவைத்து மனரீதியாக தொந்தரவு செய்யும் வகையிலான வேலைகளை வழங்கி துன்புறுத்தியும் வருகின்றனர். குறிப்பாக, தொழிற்சாலை நிர்வாக துறையை சேர்ந்த வடமாநில அதிகாரி, தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அப்பட்டமாக கைகளில் எடுத்து, அதற்கான முயற்சியாக நேரடி மற்றும் மறைமுக தொந்தரவு போன்றவற்றை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் தொடரும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் பெரும் போராட்டம் தொடங்கும்., அதனால் ஏற்படும் இழப்புகளை சந்திக்க தயாராக வேண்டும் என்றும் தொழிலாளர்கள் ஆதங்க குரல் எழுப்புகின்றனர்.
முன்னதாக, சமீபத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தை அழைத்து, பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் தொடர்பாக உடனடி பேச்சுவார்த்தை நடத்தி முடிவை காணுங்கள் என்றும், போராட்டம் போன்ற சூழலுக்கு தொழிலாளர்களை தள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கிறது.
TamilSpark Exculsive...