#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 45 நாட்களேயான பச்சிளம் கைக்குழந்தை பரிதாப பலி..!
சென்னையில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஒன்று அதிவேகமாக பயணம் செய்துள்ளது. இந்த நிலையில் எதிர்திசையில் வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 45 நாட்களான பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு கார்களில் வந்தவர்களும் காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.