தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
செப்டம்பர் 10 முதல் 13 வரை வெளுத்துவாங்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திதொகுப்பில், "ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக 10-ம் தேதியான இன்று வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.
11-ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் தமிழக கடலோர பகுதி, வடக்கு கேரளா கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு - தென்கிழக்கு வங்கக்கடல், கர்நாடக கடலோர பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல், ஆந்திர கடலோர பகுதி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.