பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தொடர் விடுமுறையால் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 வரை நீட்டிப்பு.!
தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி நாளை வியாழக்கிழமை மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர் விடுமுறை காரணமாக நாளை (அக்.29) வியாழக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 30-ம் தேதி மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.