78 வயது முதியவருக்கு ஏற்பட்ட வினோத ஆசையால் நிகழ்ந்த விபரீதம்! இளைஞரின் வெறிச்செயல்



chennai-murder

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரம், குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். 78 வயதான இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.இருந்தாலும் பாஸ்கரன் தனிமையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அருகிலுள்ள மாங்காடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது பாஸ்கரன் இறந்து கிடந்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

chennai

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாஸ்கரனின் தலையில் காயமும், கழுத்து நெரிக்கப்பட்டதும்  தெரியவந்தது.

மேலும் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பாஸ்கரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் அகமது என்பவரிடம் கடைசியாக பேசியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்தான் அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அதற்கான காரணத்தை அவர் கூறியதை கேட்டு காவலர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

chennai

அதாவது அகமது என்பவர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையில் அடிக்கடி சாப்பிட சென்றுள்ள பாஸ்கர். அப்போது பாஸ்கருக்கும் அகமதுவுக்கும் இடையே நட்பு எழுந்துள்ளது. அதனடிப்படையில் பாஸ்கரன்  அகமதுவுக்கு  பணம் தந்து உதவுவதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அகமதுவிடம் பாஸ்கரன் நாம் இருவரும் சேர்ந்து இருக்கலாம் என கட்டாயப்படுத்தியுள்ளார்.

அகமது  இதனை ஒப்புக் கொள்ளாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராற்றில் அருகிலுள்ள செங்கல்லை எடுத்து தலையில் ஓங்கி அடித்ததும்  பாஸ்கரன் தரையில் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் கழுத்தில் மற்றும் கையில் உள்ள நகைகளை எடுத்து சென்று விட்டதாக அகமது கூறியுள்ளார்.