மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; பாஜக பிரமுகருக்கு சென்னை காவல்துறை வலைவீச்சு.!

சென்னை பல்லாவரம், பொழிச்சலூர், பாலாஜி நகரில் வசித்து வருபவர் ஜெயராமன். இவர் பாஜகவில், செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறையில், துணைத் தலைவர் பொறுப்பு வகித்து வருக்கார். இவரின் மனைவி அஸ்வினி, பாஜக செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இதே பகுதியில் Yong Sports of India என்ற அலுவலகத்தையும் நடத்தி வருகின்றனர்.
தன்னை ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டி உறுப்பினர், சர்வதேச அளவில் தனக்கு பழக்கம் உண்டு, ஒலிம்பிக் போட்டியில் நான் நடுவர் என போலியான அடையாள அட்டையை தயாரித்து வைத்து, தன்னை சந்திக்க வரும் நபர்களிடம் மத்திய அமைச்சர்களின் பெயரைக்கூறி, மத்திய அரசின் விளையாட்டு பிரிவில் பணி வாங்கித்தர இயலும் என பேசி மயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
போலி பணி நியமன ஆணை
இது உண்மை என நம்பி வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் லோகேஷ் குமார் (வயது 32), மத்திய அரசு வேலைக்கு என ரூ.17 இலட்சம் பணம் வழங்கியுள்ளார். பணத்தை வாங்கிய இருவரும் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்ற, லோகேஷ் பணத்தை கேட்டபோது, வேலைக்கான பணி ஆணையை வழங்கி இருக்கின்றனர்.
பணத்தை இழந்தவர் மீது தாக்குதல்
பணி அணியுடன் சென்ற லோகேஷுக்கு ஏமாற்றமே மிஞ்ச, ஆத்திரமடைந்த லோகேஷ் குமார் தனக்கு நியாயம் கேட்டு ஜெயராமன், அஸ்வினி, உதவியாளர் பிரியா ஆகியோரிடம் நியாயம் கேட்டு சென்றுள்ளார். அப்போது, இவர்கள் அனைவரும் சேர்ந்து லோகேஷை தாக்கி இருக்கின்றனர்.
இந்த விஷயம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் தலைமறைவான பாஜக நிர்வாகியை குடும்பத்துடன் தேடி வருகின்றனர். இவர்கள் பலரிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்வது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: போதைக்கு பணம் வேண்டி, சென்னை மெட்ரோ இரும்பு தளவாடங்களில் கைவைத்த ஆசாமிகள்; 3 பேர் கும்பல் கைது.!