சென்னையை உலுக்கிய பழ வியாபாரி கொலை வழக்கு; கொள்ளையில் ஈடுபட்டு கொலையில் முடித்த கூட்டம்.! வாக்குமூலத்தில் பரபரப்பு உண்மை அம்பலம்.!



chennai-pallavaram-women-murder-case

 

சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்த பழ வியாபாரி ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் வைத்து தனது தங்கை நாகவல்லி மற்றும் கள்ளக்காதலன் சக்திவேல் உட்பட 5 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். 

இவ்விவகாரத்தில் காவல் துறையினர் குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் முறையற்ற வாழ்க்கையில் இருந்த ராஜேஸ்வரி, கள்ளக்காதல் பழக்கத்தில் ஈடுபட்ட தங்கையை கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்தது.

chennai
 
இந்நிலையில், இக்கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக குற்றவாளிகள் சைதாப்பேட்டை ஜெகதீசன், மீஞ்சூர் சூர்யா, திண்டிவனம் சக்திவேல், சென்னை ஜான்சன், ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி ஆகியோர் கொலைக்கு முன்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. 

இவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூரில் ஓட்டுநர் செல்வம் என்பவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு பின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பல் விசாரணைக்காக வானூர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.