#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப சண்டையில் செய்யும் சம்பவமா இது?. ஆயுதத்தால் பறிபோன உயிர்..!
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவில் பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அப்பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கண்ணகி (வயது 49). கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினமும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், மனைவி கண்ணகியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கண்ணகியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவருக்கு தையல் போடப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த கண்ணகி நேற்று மாலை நேரத்தில் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கண்ணகியின் கணவர் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.