#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பஸ்ட் நைட்-ல சரக்கடிப்பேன், அப்புறம்.... மனைவியின் பகீர் செயல்., அலறியோடிய கணவன்..!
திருமணம் என்ற போர்வையில் நடக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கும்பல் ஒன்று திட்டமிட்டு நடத்தி வருவது விசாரணையில் உறுதியாகி அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 32). இவர் சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு திருமணம் செய்ய கடந்த சில வருடமாக வரன் தேடி வந்த நிலையில், எங்கு வரன் பார்த்தும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்நிலையில், புரோக்கர் மூலமாக மகேஸ்வர பூஜா என்ற 37 வயது பெண்ணை பார்த்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் விருதுநகரில் உள்ள கோவிலுக்கு சென்று இருவரும் சந்தித்துக்கொண்ட நிலையில், தமிழ்வாணனுக்கு பூஜாவை பிடித்திருந்ததால் இருவரும் திருமணம் செய்ய சம்மதித்துள்ளனர்.
இருவீட்டாரும் பேசி முடித்து பெண் வீட்டிற்கு ரூ.2 இலட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், பூஜாவின் உறவினர்கள் யாரும் வராமலேயே திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்ததும் பள்ளிக்கரணைக்கு இருவரும் சென்ற நிலையில், முதலிரவு ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் தனக்கு மாதவிடாய் நாட்கள் என்று கூறி தள்ளிப்போட்டுள்ளார்.
பின்னர், சிறுது நேரத்தில் தனக்கு மதுபானம் வேண்டும் என்று கணவரிடம் கேட்கவே, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சில நாட்களில் புதுமணப்பெண் மயமாகி இருக்கிறார். அவருக்கு தொடர்பு கொண்டும் பலன் இல்லாததால் திருமணம் செய்த கணவர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். மேலும், புதுமணப்பெண் நகை மற்றும் பணத்துடன் மாயமாகி இருக்கிறார்.