#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் மரணம்; இன்ஸ்டா விளம்பரத்தால் நேர்ந்த சோகம்?.. கணவர் கண்ணீர்.!
சென்னையில் உள்ள செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஜித். மனைவி சுகன்யா. தம்பதிகளுக்கு 27 வயது ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
தற்போது சுகன்யா கர்ப்பமாக இருந்த நிலையில், முதல் 5 மாதங்கள் மாதவரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்திருக்கிறார்.
இதனிடையே, சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையின் இன்ஸ்டாகிராம் கணக்கில், ப்ரவசத்தின்போது பெண்ணின் கணவர் பிரசவத்தை பார்க்க அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் இருந்துள்ளது.
இதனால் அஜித் தனது மனைவி சுகன்யாவை சிகிச்சைக்காக அம்மருத்துவமனையில் அனுமதிக்கவே, கடந்த 4 மாதமாக அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. கடந்த 16ம் தேதி பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு ஊசிகள் செலுத்தப்பட்ட நிலையில், திடீரென சுகன்யாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். மயக்கத்தின்போதே அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் பார்த்ததில், ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சுகன்யா தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், அவரை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் கணவர் அஜித்திடம் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்பேரில், எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது, அங்கு தீவிர சிகிச்சை பெற்ற சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். சுகன்யாவின் குழந்தையும் இன்குபேட்டரில் இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யாவின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்போதே, மனரீதியாக உடைந்துபோன அஜித் லாரி முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.