#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்று கனமழை வெளுத்து வாங்கும் மாவட்டங்கள்; அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டியுள்ள பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக்.17) தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யலாம்.