#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை; அறிவிப்பு இதோ.!
இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸில் இருந்து 21 டிகிரி செல்ஸியஸ் வரை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.