#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தையுடன் விளையாடிய 8 மாத குழந்தை, படிக்கட்டில் உருண்டு விழுந்து பரிதாப பலி; கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்.!
குழந்தைகளுடன் விளையாடும் பெற்றோர் ஆபத்து மிகுந்த பகுதிகளுக்கு அருகே குழந்தைகளை அழைத்து சென்றதால் ஏற்படும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் லெனின். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 8 மாதமாகும் வேல்முருகன் என்ற குழந்தை இருக்கிறார். நேற்று காலை நேரத்தில் குழந்தை வீட்டின் படிக்கத்தில் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தை வேல்முருகன், சிகிச்சைக்காக கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.