#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட்டத்தை பிடிக்க எண்ணி 12 வயது சிறுவன் பரிதாப பலி; உடல் உறுப்புகளை தானம் செய்து பெற்றோர் நெகிழ்ச்சி.!
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சேர்ந்த சிறுவன் பிரசன்னா (வயது 12). சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்தவாறு பட்டம் விட்டுக்கொண்டு இருந்தான்.
இந்த நிலையில், அப்போது சிறுவனின் பட்டம் அறுபட்ட நிலையில், அதனை பிடிக்க எண்ணி மாடியின் ஓரத்திற்கு சென்றுள்ளான்.
அந்த சமயத்தில், எதிர்பாராமல் சிறுவனின் கால் இடரவே, 2வது மாடியில் இருந்து சிறுவன் கீழே விழுந்துள்ளான். இந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்து பரிதாபமாக பலியாகினான்.
சிறுவனின் பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்ததன் பேரில், உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.