#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருடனை கண்டறிந்து மனைவியின் கள்ளக்காதலனை அம்பலப்படுத்திய விசாரணை.. சென்னையில் ஷாக் சம்பவம்.!
கள்ளக்காதலியின் வீட்டில் கைவரிசை காண்பித்த காதலன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆம் தேதி திருவெல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "அமரர் ஊர்தி நிறுவனத்தை நடத்தி வரும் தனது கணவர், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.2 இலட்சம் பணத்தை பீரோவில் வைத்திருந்தார். இதனைப்போல, 21 சவரன் நகைகள் பீரோவில் இருந்தது. இவை இரண்டும் மாயமாகியுள்ளன. நகைகளை அதிகாரிகள் கண்டறிந்து தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், நிகழ்விடத்திற்கு அருகே இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, பவித்ராவின் வீட்டில் இருந்து வெளியே வந்தவர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
மேலும், பவித்ராவின் செல்போனில் இருந்து சுமன் என்ற நபருக்கு அதிக நேரம் பவித்ரா பேசி வந்தது உறுதியான நிலையில், அவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது, கள்ளக்காதல் விவகாரம் மற்றும் கள்ளகாதலியின் இல்லத்தில் நடந்த திருட்டு சம்பவம் அம்பலமாகியுள்ளது.
முகநூல் மூலமாக பவித்ராவுக்கும் - சுமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது கள்ளக்காதலியின் இல்லத்திற்கு சுமன் வந்து சென்றுள்ளார். அப்போது, கள்ளக்காதலியின் வீட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கள்ளக்காதலிக்கு தெரியாமல் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
கள்ளக்காதலியின் வீட்டில் திருடிய பணத்தை வைத்து சொந்த கார் வாங்கி, சொகுசான வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார். இறுதியாக பெண்மணி கொடுத்த புகாரில் அவரின் கள்ளக்காதலும் அம்பலமாக, கள்ளகாதலிக்கு தெரியாமல் திருடி செல்லப்பட்டதில் மீதம் இருந்த நகை, பணமும் மீட்கப்பட்டன. கைதான சுமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.