#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுமியை காதலித்து, குழந்தை திருமணம் செய்து கற்பழித்த இளைஞன் போக்ஸோவில் கைது.!
சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் திருவெல்லிக்கேணி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த ஜன. 3 ஆம் தேதி முதல் காணவில்லை. இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் D2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிறுமி விக்னேஷ் என்ற நபரை காதலித்து வந்தது தெரியவந்த நிலையில், விக்னேஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார் என்பதும், அதன் வாயிலாக சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி இருப்பதும் உறுதியானது.
இதனையடுத்து, வழக்கை W2 திருவெல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலாயத்திற்கு மாற்றம் செய்த அதிகாரிகள், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை (வயது 18) கைது செய்து சிறையில் அடைத்தனர்.