பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
17 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு அழைத்து மிரட்டல் விடுத்த காமக்காதலன்.. சென்னையில் அதிர்ச்சி.!
சென்னையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி, கடந்த சில வருடமாக முதலியார்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 17 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, மேற்படி படிக்காமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். தம்பதிகள் இருவரும் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவரும் நேரங்களில், மகளையும் உடன் அழைத்து சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்து சென்ற சிறுமியிடம், அப்பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்த பிரவீன் குமார் (வயது 19) என்பவர் பழகி வந்துள்ளார். இவர்கள் தனிமையில் சந்தித்து பேசும் போது, சிறுமியிடம் காம இச்சையை தீர்க்க முடிவெடுத்த பிரவீன், பலாத்காரத்திற்கு காதல் மொழியில் வலைவீசியுள்ளார்.
ஆனால், சிறுமியோ தெளிவாக இருந்து மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பிரவீன் சிறுமியிடம் உனது புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறான்.
ஒருகட்டத்தில் பிரவீன் குமாரின் மிரட்டல் அதிகரிக்கவே, சிறுமி தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.